திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த சித்ராதேவி: திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுத்துார் தான் என் சொந்த ஊர். விவசாய குடும்பம். என் கணவர் திருமணத்துக்கு முன், துபாயில் இருந்த தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திருமணம் முடிந்து அவர் மறுபடியும் வேலைக்காக துபாய் போகும்போது, நானும்
அவருடன் சென்றேன்.
அந்த நாட்டுல பாலைவனத்துல விவசாயம் செய்வதை பார்க்க ஆச்சரியமா இருந்தது. பக்கத்துல இருந்த ஷார்ஜா, சவுதி அரேபியா நாடுகளுக்கும் போய், அங்க எப்படி விவசாயம் செய்கின்றனர் என்று பார்த்தேன். பாலைவனத்தில் குறைந்த மழை.
அதிலேயே விவசாயம் செய்யும் போது நம் நாட்டில் எவ்வளவு வளங்களும்,
வழிகளும் இருக்கு. நம் ஊரில் ஏன் விவசாயம் செய்யக்கூடாதுன்னு தோன்றியது. உடனே கணவரிடம் பேசினேன்.
அவர் வேலையை விடச் சொன்னேன். அதை விட்டுட்டு இந்தியா வந்துட்டோம். எங்க முடிவுக்கு வீட்டுல பலத்த எதிர்ப்பு. எல்லாரிடமும் திட்டு களும், ஏச்சுக்களும் வாங்கினோம். ஆனால், கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
கடந்த ௨௦௧௬ம் வருஷம் என் வீட்டு மொட்டை மாடியில் மாடித்தோட்டம் அமைக்க ஆரம்பித்தேன். நாட்டு காய்கறி, கீரை விதைகளை தான் பயன்படுத்தினேன்.
மண்புழு உரம், மீன் அமிலம் தயாரிக்க பயிற்சி எடுத்து, அதை என் மாடித் தோட்டத்துக்கு மட்டும் பயன்படுத்திக்கிட்டு வந்தேன். அறுவடை செய்யும் காய்கறிகளை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்துக்கிட்டே வந்தேன். அதை பார்த்த சிலர் அவங்க தோட்டத்துக்கு இயற்கை உரங்கள் வேண்டும்; மாடித்தோட்டம் அமைக்கணும்ன்னு கேட்டாங்க. அப்படி கேட்டவங்களுக்காக இயற்கை உரங்களை தயாரிக்க ஆரம்பித்தேன். மண் புழு உரம், மீன் அமிலம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், '௩ஜி' கரைசல், கழிவுச்சிதைவு உரம் என, இயற்கை இடுபொருட்களை தயார் செய்து, கேட்பவர்களுக்கு கொடுத்து வருகிறேன்.
மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றி வகுப்புகளையும் நடத்திக் கொண்டு வருகிறேன். நாட்டு காய்கறி விதைகளை இலவசமாக கொடுக்
கிறேன்.
உரத் தயாரிப்பு செலவு போக மாதம், ௫௦ ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
லாப பணத்தில் ஒவ்வொரு மாதமும் ௮,௦௦௦ ரூபாய் எடுத்து பழக்கன்றுகளை வாங்கி இலவசமாக கொடுப்பேன். பறவைகளோட உணவுக்காக தான் பழ
மரக்கன்றுகளை கொடுக்கிறேன்.
தொடர்புக்கு: ௮௧௨௨௨ ௩௭௬௬௮
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE