எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தொடரும் மனித, யானை மோதல்: 6 ஆண்டுகளில் 42 பேர் உயிரிழப்பு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஓசூர் வனக்கோட்டத்தில், யானை, மனித மோதல்கள் தொடரும் நிலையில், ஆறு ஆண்டுகளில் மட்டும், 42 பேர் உயிரிழந்துள்ளனர்.சேலம் வனக்கோட்டத்தில் இருந்து, ஓசூர் வனக்கோட்டம் பிரிக்கப்பட்டு, 1968 நவ., 8 முதல், தனியாக செயல்படுகிறது. கர்நாடகா - தமிழக வன எல்லை மட்டும், 82.35 கி.மீ., உள்ளது.* இடம் பெயர்தல்ஒவ்வொரு ஆண்டும் செப்., அல்லது அக்.,ல் கர்நாடகா மாநிலத்திலிருந்து, 150க்கும் மேற்பட்ட
மனித, யானை மோதல் , 6 ஆண்டுகள்,  42 பேர் உயிரிழப்பு

ஓசூர் வனக்கோட்டத்தில், யானை, மனித மோதல்கள் தொடரும் நிலையில், ஆறு ஆண்டுகளில் மட்டும், 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் வனக்கோட்டத்தில் இருந்து, ஓசூர் வனக்கோட்டம் பிரிக்கப்பட்டு, 1968 நவ., 8 முதல், தனியாக செயல்படுகிறது. கர்நாடகா - தமிழக வன எல்லை மட்டும், 82.35 கி.மீ., உள்ளது.


* இடம் பெயர்தல்ஒவ்வொரு ஆண்டும் செப்., அல்லது அக்.,ல் கர்நாடகா மாநிலத்திலிருந்து, 150க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக வனப்பகுதியான ஜவளகிரி வழியாக, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஓசூர் வனச்சரகத்தை கடந்து, ஆந்திரா வரை இடம் பெயரும்.

அப்போது, வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் விவசாய பயிர்கள் அதிகளவு நாசமாகும். 2016 முதல் கடந்தாண்டு வரை மட்டும், 4,902 விவசாயிகளுக்கு, 3 கோடியே, 68 லட்சத்து, 63 ஆயிரத்து, 226 ரூபாய் பயிர் நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இடப்பெயர்வு காலகட்டத்தில், மனித, யானைகள் மோதலும் நடக்கிறது.

கடந்த 2016 முதல் 2021 வரை ஆறு ஆண்டுகளில், 42 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு, 1.75 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
யானை, மனித மோதலை தடுக்க, அகழி வேலி, சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 2018 - 19 கால கட்டத்திற்கு பின், தற்போது பயிர் சேதம் குறைந்துள்ளதாக வனத்துறை தரப்பில் கூறினாலும், யானை, மனித மோதல்கள் குறையவில்லை. இது தொடர்கதையாக உள்ளது.


* இயற்கை சமநிலைஇது குறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
விவசாயிகள், தங்களது பயிரை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, விஷம் வைத்தல், வலைப்பொறி மற்றும் துப்பாக்கியால் சுடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், விலங்குகள் அழிக்கப்பட்டு, இயற்கை சமநிலை சீரழிந்து வருகிறது.

மனிதர்கள் ஆடு, மாடு மேய்க்கவும், விறகு சேகரிக்கவும் செல்வதை தடுக்க முடியவில்லை. அதனால் உயிர் சேதம் தொடர்கிறது. யானை அகழிகள் பல இடங்களில் மனிதர்களால் மூடப்பட்டுள்ளது. அதன் வழியாக யானைகள் கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன.
வனப்பகுதியில் இருந்து தண்ணீர், உணவுக்காக யானைகள் வெளியே வரும்போது நடக்கும் மனித, யானை மோதலை தடுக்க, வனப்பகுதியில் தீவன தோட்டம் உற்பத்தி செய்தல், தடுப்பணை கட்டுதல், கசிவுநீர் குட்டை, நீர் துளைகள், ஆழ்துளை கிணறு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
15-ஜன-202212:13:13 IST Report Abuse
sridhar தப்ப நம்ம மேல வெச்சுகிட்டு அத போயி குத்தம் சொன்ன எப்புடி பாஸ் அதுங்க எப்போதுமே ஒரே வழியில் தான் போகும் எத்தனை வருஷம் ஆனாலும் மறக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X