திண்டிவனம் : தொழில்நுட்பக் கோளாறால் ஆதார் திருத்தப்பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அரசின் கேபிள் 'டிவி' நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், தமிழகம் முழுதும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் எல்காட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் பொது இ-சேவை மையம் மற்றும் ஆதார் கார்டில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் இ-சேவை மையத்தின் மூலம் ஜாதிச் சான்றிதழ், குடியிருப்பு மற்றும் வருமான சான்றிதழ் வழங்கும் பணி தடையில்லாமல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆதார் திருத்தப்பணிகள் நடைபெறவில்லை.
குறிப்பாக திண்டிவனம், மரக்காணம், மேல்மலையனுார், செஞ்சி, விக்கிரவாண்டி, வானுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சேவை மையங்களில் ஆதார் கார்டில் பெயர், முகவரி மாற்றம் ஆதாருடன் மொபைல் எண் இணைப்பு, திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவில்லை. இதனால், பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஆதார் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் சேவை மைய பொறுப்பாளர்கள் தரப்பில் கேட்டபோது, 'சர்வர் கோளாறு காரணமாக ஆதார் திருத்தப்பணிகள் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக மேற்கொள்ள முடியவில்லை. மையத்தில் உள்ள லேப்டாப்பில் பணிகள் மேற்கொள்வதற்கான 'ஐடி' பிளாக் செய்யப்பட்டுள்ளது.
இதனால் எவ்வித பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. சர்வர் கோளாறு சரியான பிறகுதான், பணிகள் மேற்கொள்ள முடியும். பொங்கல் பண்டிகைக்கு பிறகுதான் சர்வர் கோளாறு சரியாகும் என தமிழ்நாடு அரசின் கேபிள் 'டிவி' நிறுவனத்தின் அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்' என தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் உள்ள பல ஆதார் சேவை மையத்தில், ஆதார் பணிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பொதுமக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.தற்போது, வங்கிக் கடனிலிருந்து அரசு மூலம் அனைத்து நலத்திட்டங்களும் பெற வேண்டுமென்றால், ஆதார் கார்டு அடிப்படையாக இருப்பதால், அதில் திருத்தம் செய்ய வேண்டிய பணிகள் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.
இந்த சூழ்நிலையில், ஆதார் சேவை மையத்தில் 'சர்வர் கோளாறு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் இருப்பது, பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது.தொழில்நுட்பக் கோளாறை உடனடியாக சரி செய்து, ஆதார் சேவை மையம் வழக்கம் போல் செயல்படுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement