சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகருக்குள் புகுந்த ஒற்றை யானை

Added : ஜன 14, 2022
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை நகருக்குள் புகுந்த ஒற்றை யானை, வாழைகளை ருசித்து உட்கொண்டது.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, கருமலை பாலாஜி கோவில், வறட்டுப்பாறை, வில்லோனி கவர்க்கல் அய்யர்பாடி எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இந்நிலையில், வால்பாறை நகர் கோ - ஆப்ரேடிவ் காலனி குடியிருப்பில் நேற்று
 நகருக்குள் புகுந்த ஒற்றை யானை

வால்பாறை:வால்பாறை நகருக்குள் புகுந்த ஒற்றை யானை, வாழைகளை ருசித்து உட்கொண்டது.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, கருமலை பாலாஜி கோவில், வறட்டுப்பாறை, வில்லோனி கவர்க்கல் அய்யர்பாடி எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இந்நிலையில், வால்பாறை நகர் கோ - ஆப்ரேடிவ் காலனி குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு, 1:30 மணிக்கு ஒற்றை யானை புகுந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் பின்பக்கம் இருந்த தடுப்பு சுவரை இடித்து, பயிரிடப்பட்டிருந்த வாழைகளை உட்கொண்டது.தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். எஸ்டேட் பகுதியில் மட்டுமே முகாமிடும் யானைகள் தற்போது வால்பாறை நகருக்குள்ளும் வரத்துவங்கியுள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X