கோர்ட் ஊழியர் மீது தாக்கு| Dinamalar

கோர்ட் ஊழியர் மீது தாக்கு

Added : ஜன 14, 2022
கிணத்துக்கடவு:சம்மன் கொடுக்க சென்ற கோர்ட் உதவியாளரை தடுத்து, தாக்க முயன்ற வாலிபர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கிணத்துக்கடவு, வடபுதுாரை சேர்ந்தவர் கண்ணப்பன். இவர் தொடர்புள்ள வழக்கு ஒன்று, பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காக, பொள்ளாச்சி சார்பு நீதிமன்ற அலுவலக உதவியாளர் மூர்த்தி, 58, சம்பந்தப்பட்ட

கிணத்துக்கடவு:சம்மன் கொடுக்க சென்ற கோர்ட் உதவியாளரை தடுத்து, தாக்க முயன்ற வாலிபர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கிணத்துக்கடவு, வடபுதுாரை சேர்ந்தவர் கண்ணப்பன். இவர் தொடர்புள்ள வழக்கு ஒன்று, பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காக, பொள்ளாச்சி சார்பு நீதிமன்ற அலுவலக உதவியாளர் மூர்த்தி, 58, சம்பந்தப்பட்ட நபரை சந்தித்து சம்மனை கொடுக்க சென்றார்.அப்போது, கண்ணப்பனின் மகன் விக்னேஷ், திடீரென கோர்ட் உதவியாளரை, தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றார். இது தொடர்பாக, கிணத்துக்கடவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்ததாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X