பொது செய்தி

தமிழ்நாடு

தை பிறந்தால் வழி பிறக்கும்; கோவில்களில் சிறப்பு பூஜை

Added : ஜன 14, 2022
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி
 தை பிறந்தால் வழி பிறக்கும்; கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தை மாதம் பிறப்பு மற்றும் பொங்கல் விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் திருக்கல்யாண தோற்றத்தில் அருள்பாலித்தார்.சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜயகணபதி கோவலில், தைத்திருநாளையொட்டி சிறப்பு அபிேஷக, அல்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில், விஜயகணபதி, அங்காளம்மன், சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்தனர். திப்பம்பட்டி மலையாண்டீஸ்ரவர் உடனுறை சக்தி கோவிலில், பொங்கல் விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று சனிப்பிரோதஷ வழிபாடு நடக்கிறது.
ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லை.வால்பாறைவால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 8:00 மணிக்கு முருக பெருமானுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.ஈட்டியார் மாரியம்மன் கோவிலில், 42ம் ஆண்டு திருவிழா, கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.
கல்லார் எஸ்டேட் மாரியம்மன் கோவிலின், 64ம் ஆண்டு திருவிழாவில், நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. அக்காமலை காளியம்மன் கோவில், சோலையாறு மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.உடுமலைஉடுமலை நகரப்பகுதி மற்றும் கிராமங்களிலுள்ள கோவில்களில், கிராம மக்கள் இணைந்து பொங்கல் வைத்து, சுவாமிகளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். தொற்றுப்பரவல் காரணமாக, பாதுகாப்பு வழிமுறைகளுடன், கோவில்களில் சிறப்பு பூஜைகள்நடந்தன. முகக்கவசம், தனி மனித இடைவெளி பராமரித்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதே போல், பிரசன்ன விநாயகர் கோவிலில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். குட்டைத்திடல், சித்தி புத்தி விநாயகர் கோவிலில், குபேர விநாயகர், சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலுள்ள கோவில்களும், தைத்திருநாளை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X