பொது செய்தி

இந்தியா

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை எப்போது?

Added : ஜன 14, 2022
Share
Advertisement
கோஹிமா,-நாகாலாந்தில் பொதுமக்கள் 14 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றது குறித்த விசாரணை அறிக்கை, தடய அறிவியல் துறை முடிவுக்கு பின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என விசாரணைக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் முதல்வர் நீபு ரியோ தலைமையில் பா.ஜ., மற்றும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு மோன்

கோஹிமா,-நாகாலாந்தில் பொதுமக்கள் 14 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றது குறித்த விசாரணை அறிக்கை, தடய அறிவியல் துறை முடிவுக்கு பின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என விசாரணைக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் முதல்வர் நீபு ரியோ தலைமையில் பா.ஜ., மற்றும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு மோன் மாவட்டம் ஓட்டிங்-திரு பகுதியில் டிச., 4ம் தேதி சுரங்க தொழிலாளர்கள் ஆறு பேர் உட்பட 13 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து, பாதுகாப்பு படையினர் அவர்களை சுட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.அடுத்தநாள் மற்றொரு கிராமவாசியும் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்த மாநில அரசு, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதுகுறித்து விசாரணை குழு அதிகாரியான சந்தீப் தம்காட்ஜ் நேற்று முன்தினம் கூறியதாவது:சம்பவ இடத்திற்கு பலமுறை சென்று ரத்தம் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து கவுஹாத்தி மற்றும் ஐதராபாத்தில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களுக்கு அனுப்பி உள்ளோம்.எங்கள் விசாரணை முடிந்து தடய அறிவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்ததும், எங்கள் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X