பொது செய்தி

தமிழ்நாடு

கோவை டூ லடாக் பைக்கில் பயணம்! இந்த 'த்ரில்' அனுபவத்தை படிங்க

Added : ஜன 14, 2022
Share
Advertisement
கோவையில் இருந்து லடாக் வரை சாகச பைக் பயணம் மேற்கொண்ட கல்லுாரி மாணவர் பிவின் சாதனையை அங்கீகரித்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம், பதக்கம், சான்று வழங்கியுள்ளது.மதுக்கரை மரப்பாலத்தை சேர்ந்த சுந்தரகுமார் மகன் பிவின், 18, கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். சிறு வயது முதலே பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நீண்ட தொலைவுக்கு
 கோவை டூ லடாக் பைக்கில் பயணம்! இந்த 'த்ரில்' அனுபவத்தை படிங்க

கோவையில் இருந்து லடாக் வரை சாகச பைக் பயணம் மேற்கொண்ட கல்லுாரி மாணவர் பிவின் சாதனையை அங்கீகரித்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம், பதக்கம், சான்று வழங்கியுள்ளது.மதுக்கரை மரப்பாலத்தை சேர்ந்த சுந்தரகுமார் மகன் பிவின், 18, கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். சிறு வயது முதலே பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நீண்ட தொலைவுக்கு பைக் ஓட்டி சாகசம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கு பெற்றோரும் ஒப்புதல் அளித்தனர்.கடந்தாண்டு ஆக.,1ம் தேதி நண்பருடன் பைக்கில் கோவையில் இருந்து பிவின் புறப்பட்டார். நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக 31 நாட்கள், 6,500 கிலோமீட்டர் துாரம் பயணித்த அவர், அமிர்தசரஸ் நகரில் சாகச பயணத்தை நிறைவு செய்தார்.அவரது சாதனையை அங்கீகரித்த 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம், 'இளம் வயதில் நீண்ட தொலைவு பைக் ஓட்டிய சாதனையாளர்' என்ற சான்றிதழ், பதக்கத்தை வழங்கியுள்ளது.மாணவர் பிவின் கூறியதாவது:சாகச பைக் பயணத்துக்காக 6 மாதங்களாக பயிற்சியும், முன்னேற்பாடுகளும் செய்து தயாரான பிறகே புறப்பட்டேன். வெயில், மழை, பனிப்பொழிவு, குளிர், நிலச்சரிவு, வழிப்பறி பயம் ஆகியவற்றை கடந்து, பயணத்தின் ஒவ்வொரு நாளையும் நாங்கள் அனுபவித்தோம்.ஹிமாச்சல் மாநிலத்தில் கனமழை பெய்தது. நிலச்சரிவில் பாறைகள் உருண்டு விழுவதை மிக அருகில் இருந்து பார்த்தபோது பயம் சூழ்ந்து கொண்டது. லே நகரம் சென்றபோது, மிதமிஞ்சிய பனி, குளிர் காரணமாக எங்களது பைக், ஸ்டார்ட் ஆகவில்லை. நீண்ட நேரம் போராடி பைக்கை கிளப்பினோம். லடாக்கில் பாங்காங் ஏரியை சுற்றிப் பார்த்து விட்டு வந்த இரவு, எனக்கு குளிர் ஜூரமே ஏற்பட்டு விட்டது.பல விதமான தட்பவெப்பம், வெவ்வேறு மொழிகள், கலாசாரம், விதம் விதமான உணவுப் பழக்க வழக்கங்கள் என நான் கண்ட காட்சிகளும், அனுபவங்களும், நம் நாடு பற்றிய பெருமிதத்தை எனக்குள் ஏற்படுத்தியுள்ளன.இவ்வாறு, பிவின் கூறினார்.''ஹிமாச்சல் மாநிலத்தில் கனமழை பெய்தது. நிலச்சரிவில் பாறைகள் உருண்டு விழுவதை மிக அருகில் இருந்து பார்த்தபோது பயம் சூழ்ந்து கொண்டது. லே நகரம் சென்றபோது, மிதமிஞ்சிய பனி, குளிர் காரணமாக எங்களது பைக், ஸ்டார்ட் ஆகவில்லை. நீண்ட நேரம் போராடி பைக்கை கிளப்பினோம். லடாக்கில் பாங்காங் ஏரியை சுற்றிப் பார்த்து விட்டு வந்த இரவு, எனக்கு குளிர் ஜூரமே ஏற்பட்டு விட்டது,''

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X