பொது செய்தி

தமிழ்நாடு

'இணையதளத்தில் அனுமதி கோப்புகள் அனுப்பப்படும்'

Added : ஜன 14, 2022
Share
Advertisement
கோவை:வரும் காலங்களில் இணையதளம் வாயிலாகவே, கட்டட அனுமதி கோப்புகள் அனுப்பிவைக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி கூட்டரங்கில்,நடந்த நிகழ்ச்சிக்குப் பின்,மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்துள்ளதாவது:நகரமைப்பு பிரிவில் மொத்தம், 2,194 கோப்புகள் நிலுவையில் இருந்தன. இதில், சம்பந்தப்பட்டவர்கள் பணம் செலுத்தி

கோவை:வரும் காலங்களில் இணையதளம் வாயிலாகவே, கட்டட அனுமதி கோப்புகள் அனுப்பிவைக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி கூட்டரங்கில்,நடந்த நிகழ்ச்சிக்குப் பின்,மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்துள்ளதாவது:நகரமைப்பு பிரிவில் மொத்தம், 2,194 கோப்புகள் நிலுவையில் இருந்தன. இதில், சம்பந்தப்பட்டவர்கள் பணம் செலுத்தி ஒப்புதலுக்காக வந்த கோப்புகள், 826, கட்டட உரிமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட கோப்புகள், 685, பணம் செலுத்தப்படாத கோப்புகள், 56 மற்றும் நிலுவையிலுள்ள கோப்புகள், 627; தற்போது, 141 கோப்புகள் பரிசீலனையில் உள்ளன.கடந்த நவ., 1ம் தேதி அன்று, 28 சதவீத கோப்புகளுக்கு கட்டட அனுமதி அளிக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளால் இது, 82.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. மீதமுள்ளதில் தகுதியுடைய கோப்புகளுக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும்.கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுமெனில், சம்பந்தப்பட்டவர்கள் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய பொறியாளர்கள் அறிவுறுத்த வேண்டும். வரும் காலங்களில் கட்டட அனுமதி வேண்டி விண்ணப்பித்தவர்கள், உரிய நகலுடன் மண்டல அலுவலகங்களுக்கு வரத்தேவையில்லை. இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கோப்புகள் அனுப்பப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X