பொது செய்தி

தமிழ்நாடு

கோவை மாவட்டத்தில் தொற்று பரவல் 11.5 சதவீதம்

Added : ஜன 14, 2022
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல், 11.5 சதவீதமாக இருக்கிறது.கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மூன்றாவது அலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது; இம்மாத துவக்கத்தில் இரட்டை இலக்க எண்ணில் பாதிப்பு இருந்தது. 10 நாட்களில், ஆயிரத்தை கடந்து விட்டது. இப்போது, 6,328 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.கோவிட் கேர் சென்டரில், 3,851 படுக்கை வசதி செய்யப்பட்டிருக்கிறது. டாக்டர்கள்,

கோவை:கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல், 11.5 சதவீதமாக இருக்கிறது.கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மூன்றாவது அலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது; இம்மாத துவக்கத்தில் இரட்டை இலக்க எண்ணில் பாதிப்பு இருந்தது. 10 நாட்களில், ஆயிரத்தை கடந்து விட்டது. இப்போது, 6,328 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.கோவிட் கேர் சென்டரில், 3,851 படுக்கை வசதி செய்யப்பட்டிருக்கிறது. டாக்டர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 183 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில், 69, ஆக்சிஜன் படுக்கையில், 410 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனைகள் மூலமாக நடத்தும் மருத்துவ முகாம்களில், 10 ஆயிரத்து, 126 சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அதில், 1,162 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் தொற்று பரவல், 11.5 சதவீதமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. தொற்று பரவல், 10 சதவீதத்தை கடந்ததால், கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X