ரூர்கீ-ஹரித்வார் கூட்டத்தில் வெறுப்புணர்வை துாண்டும் விதமாக பேசிய வழக்கில் சிக்கிய யதி நரசிங்கானந்த், போலீசாரை பார்த்து, 'நீங்கள் எல்லோரும் இறந்து விடுவீர்கள்' என, கோபத்துடன் கூறும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
உத்தரகண்ட்டில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை துாண்டும் விதமான கருத்துக்கள் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரம் தொடர்பாக யதி நரசிங்கானாந்த், ஜிதேந்திர தியாகி, சாத்வி அன்னபூர்ணா உட்பட 10க்கும் மேற்பட்டோர் மீது உத்தரகண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரகண்ட் போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர தியாகி என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரான யதி நரசிங்கானந்திடம் போலீசார் பேசும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அதில், யதி நரசிங்கானந்த் காரில் அமர்ந்தபடி போலீசாருடன் உரையாடுகிறார். அதில், விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி யதி நரசிங்கானந்திடம் போலீசார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அப்போது போலீசை அவமதிக்கும் விதமாக யதி நரசிங்கானந்த் பேசுவதும், 'நீங்கள் அனைவரும் இறந்து விடுவீர்கள். உங்கள் குழந்தைகளும் இறந்து விடுவர்' என, கோபத்துடன் பேசுவதும் வெளியாகி உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement