திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் அனைத்து பகுதியிலும் கொண்டாடப்பட்டது. புதுப்பானையில் பொங்கல் வைத்து வீடுகளில் வழிபாடு செய்தனர்.திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் போகி பண்டிகை கொண்டாடி, வீடுகளில் காப்பு கட்டப்பட்டது.
நேற்று அதிகாலை முதலே வீடுகளிலும், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என பணியாற்றும் இடங்களிலும் மக்கள் பொங்கல் வைத்தனர். புதுப்பானையில் விறகு அடுப்பு மூட்டி, ''பொங்கலோ பொங்கல்' என உற்சாகமாக குரல் எழுப்பினர்.தொடர்ந்து, சூரிய பகவானுக்கு பொங்கல் படையல் செய்யப்பட்டது. பொங்கல் பானையில் பொட்டு வைத்து பூ மாலை அணிவித்து, வாழை, கரும்பு, மஞ்சள் ஆகியன வைத்து, மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து வைத்து, தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.
புத்தாடை அணிந்து வீடுகளில் குடும்பத்தினர் ஒன்று திரண்டு வழிபட்டனர்.தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் இது போன்ற பண்டிகை கொண்டாட்டங்கள் இது போன்ற இறுக்கங்களை தவிர்த்து சகஜ நிலைக்கு மக்களை திரும்ப கொண்டு வரும் வகையில், உற்சாகமான கொண்டாட்டமாக பொங்கல் பண்டிகை அமைந்தது குறிப்பிடத்தக்கது.மக்கள் கூட்டம்பொங்கல் பண்டிகை முன்னிட்டு விடுமுறை என்பதால் தொழில் நிறுவனங்கள் இயங்கவில்லை. ஏராளமான கடைகளும் திறக்கப்படவில்லை.
இருப்பினும் கடைவீதிகளில் திறக்கப்பட்டிருந்த கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற நிலையில், பலரும் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு செய்தனர். பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பண்டிகை கொண்டாட்டத்துக்கு சொந்த ஊர் செல்லவும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வோர் எனவும் நகரின் பிரதான ரோடுகளில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE