சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு விழா; 15 பேர் மீது வழக்கு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
புதுக்கோட்டை-புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில், நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடந்தது. ஏற்கனவே, பதிவு செய்யப்பட்ட 700 காளைகளில், 587 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன.மீதமுள்ள காளைகளை அவிழ்த்து விடுவதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள், வாடிவாசல் அருகில் 50க்கும் மேற்பட்ட காளைகளை, ஒரே நேரத்தில்

புதுக்கோட்டை-புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில், நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடந்தது. ஏற்கனவே, பதிவு செய்யப்பட்ட 700 காளைகளில், 587 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன.மீதமுள்ள காளைகளை அவிழ்த்து விடுவதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள், வாடிவாசல் அருகில் 50க்கும் மேற்பட்ட காளைகளை, ஒரே நேரத்தில் அவிழ்த்து விட்டனர்.காளைகள் சீறிப் பாய்ந்ததில் பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உட்பட பலர் அலறியடித்து ஓடினர்.தமிழக அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக, ஜல்லிக்கட்டு நடத்திய விழா கமிட்டியினர் 15 பேர் மீது, கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X