ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் ரோட்டோர வியாபாரிகளுக்கு கடன்| Dinamalar

ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் ரோட்டோர வியாபாரிகளுக்கு கடன்

Added : ஜன 15, 2022
மதுரை :மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ரோட்டோர வியாபாரிகளுக்கு தனிநபர் ஜாமின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது.விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை கடன் பெற்று 120 நாட்களுக்குள் செலுத்தவேண்டும். தையல், இட்லி, காய்கறி, பழக்கடை, மீன், பூ, பால்கடை, துணி

மதுரை :மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ரோட்டோர வியாபாரிகளுக்கு தனிநபர் ஜாமின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது.விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை கடன் பெற்று 120 நாட்களுக்குள் செலுத்தவேண்டும். தையல், இட்லி, காய்கறி, பழக்கடை, மீன், பூ, பால்கடை, துணி வியாபாரம், கூடைமுடைவோர் கடன் பெறலாம். ஒருநபர் ஜாமின் தேவை.மாற்றுத்திறனாளி ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. ரூ.25 ஆயிரம் வரை ஒருநபர் ஜாமின், ரூ.50 ஆயிரம் வரை இரு நபர் ஜாமின் தேவை. அதற்கு மேல் சொத்து அடமானம் தேவைப்படும். ஊனத்தின் தன்மை 40 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். அடையாள அட்டை தேவை. தொழில் குறித்து திட்ட அறிக்கை தேவை. மூன்றாண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.ரோட்டோர வியாபாரிகளுக்கு மூலதன கடனாக 11.5 சதவீத வட்டியில் ரூ.10ஆயிரம் கடன் பெறலாம். 18 - 65 வயதுக்குட்பட்டவர்கள் ரோட்டோரம் வியாபாரம் செய்வதற்கான சான்று, அடையாளஅட்டை, தொழில் குறித்து விலைப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டும். ஓராண்டுக்குள் கடனை செலுத்த வேண்டும்.கடன் திட்டம் குறித்து மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் ஜீவா கூறுகையில், ''மாற்றுத்திறனாளிகள் தவணை தவறாமல் கடன் கட்டினால் வட்டி செலுத்த தேவையில்லை. சாலையோர வியாபாரிகளுக்கு 7 சதவீத வட்டி மானியம் உண்டு. மதுரை மாவட்டத்தில் உள்ள 34 கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X