ஒரு போன் போதுமே... மூச்சுத்திணறல்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம் மெயின் ரோட்டில், கே.ஆர்.ஜி., அபார்ட்மென்ட் அருகே குப்பை, கழிவுகளை கொட்டி தீ வைப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.-கணேசன், அவிநாசிலிங்கம்பாளையம்.பணிகள் மந்தம்ஊத்துக்குளி ரோடு - வளம்பாலம் இணைக்கும், யூனியன் மில்ரோடு சிமென்ட் சாலை பணி படுமந்தமாக நடக்கிறது. இதனால், மூன்று கி.மீ.,

அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம் மெயின் ரோட்டில், கே.ஆர்.ஜி., அபார்ட்மென்ட் அருகே குப்பை, கழிவுகளை கொட்டி தீ வைப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.-கணேசன், அவிநாசிலிங்கம்பாளையம்.
பணிகள் மந்தம்
ஊத்துக்குளி ரோடு - வளம்பாலம் இணைக்கும், யூனியன் மில்ரோடு சிமென்ட் சாலை பணி படுமந்தமாக நடக்கிறது. இதனால், மூன்று கி.மீ., சுற்றி மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்கின்றன. பணியை விரைந்து முடிக்க வேண்டும்.-தங்கமணி,கே.பி.என்., காலனி.
வீணாகும் தண்ணீர்
திருப்பூர் பழனியம்மாள் பள்ளி வீதி, பெரியகடைவீதியில் இரண்டு இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. குழாய்களை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.-ராஜேஷ்கண்ணா, திருப்பூர்.
இருள் சூழ்ந்த பகுதி
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் கூடுதல் விளக்கு பொருத்த வேண்டும். நுாற்றுக்கணக்கான பெண்கள் காத்திருக்குமிடத்தில் போதிய வெளிச்சமின்றி கும்மிருட்டாக காணப்படுகிறது.-ராஜூ, குமரன் ரோடு.
தபால் ஆபீஸ் திறக்க தாமதம்
திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் எப்போதும் தாமதமாக திறக்கப்படுகிறது. தினமும் காலையில், 50க்கும் அதிகமானோர் வந்து அலுவலகம் முன் காத்திருக்கின்றனர்.10:15 மணிக்கு பின்பே அலுவலகம் திறக்கப்படுகிறது. உயரதிகாரிகள் ஆய்வு செய்திட வேண்டும்.- சஞ்சய்ராஜ், சபாபதிபுரம்.
பல்லாங்குழி ரோடு
திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் இருந்து காலேஜ்ரோடு செல்லும் சிறுபூலுவப்பட்டி ரிங்ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். புதிய ரோடு அமைக்க வேண்டும்.- சந்தோஷ்குமார்,15 வேலம்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X