அவிநாசியில் ஆட்டோ ஓட்டுபவர் சிராஜ். கடந்தாண்டு கொரோனா பரவிய போது, தொற்று பாதித்தவர்களை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேவை புரிந்தார். மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளதால், தனது ஆட்டோவில், எமதர்மனை மையப்படுத்தி, அச்சிட்ட பேனரை வைத்துள்ளார்.அதில் பூலோகம் சென்று வரும் எமதர்ம ராஜன், சித்ரகுப்தரிடம், 'அங்கு எல்லோரும் ஒரு வகை கவசம் அணிந்து இருப்பதால் அடையாளம் காண முடியாமல் போய்விட்டது. ஆதலால், முகத்தில் கவசம் அணியாதோர் சிலரை தான் இங்கு என்னால் கொண்டு வர முடிந்தது,' என அச்சிடப்பட்டுள்ளது.
மற்றொரு பகுதியில், 'எமலோகத்தில் இடமில்லை; தயவு செய்து, அவசியமின்றி வீட்டை விட்டு யாரும், வெளியே வர வேண்டாம்,' என எமதர்ம ராஜன் சொல்வது போலவும் வாசகம் இடம் பெற்றுள்ளது.சிராஜ் கூறுகையில், ''கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய அரசின் விதிமுறைகளை கையாள்வது அவசியமாக உள்ளது. எனவேதான், முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக எனது ஆட்டோவில் இந்த பேனரை வைத்துள்ளேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE