பொது செய்தி

இந்தியா

இலங்கைக்கு ரூ.6700 கோடி கடன் வழங்க இந்தியா உறுதி

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (9)
Share
Advertisement
கொழும்பு :அன்னிய செலவாணி பற்றாக்குறையால் உணவுப்பொருள் இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கும் இலங்கைக்கு 6700 கோடி ரூபாய் கடன் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் உணவுப்பொருள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியாவிடம் 7300 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான பேச்சு
  இலங்கை, ரூ.6700 கோடி கடன், இந்தியா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு :அன்னிய செலவாணி பற்றாக்குறையால் உணவுப்பொருள் இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கும் இலங்கைக்கு 6700 கோடி ரூபாய் கடன் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் உணவுப்பொருள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியாவிடம் 7300 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான பேச்சு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக இலங்கை மத்திய வங்கி கவர்னர் அஜித் நிவார்ட் கப்ரால் சமீபத்தில் கூறி இருந்தார்.


latest tamil news



இந்நிலையில் இந்தியா சார்பில் இலங்கைக்கு 6700 கோடி ரூபாய் கடன் வழங்குவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, அஜித் நிவார்ட்டை சந்தித்தார். இந்திய வழங்கும் கடன் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருள் இறக்குமதிக்கு போதுமானதாக இருக்கும் என அஜித் நிவார்ட் தெரிவித்துள்ளார்.
'இந்தியாவின் கடன் உதவியால் இலங்கையிடம் டிச., இறுதியில் இருந்த உணவுப்பொருள் இறக்குமதிக்கான கையிருப்பு இரு மடங்காக உயரும்' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan Subramanian - Mahé,செசேல்ஸ்
15-ஜன-202209:04:49 IST Report Abuse
Radhakrishnan Subramanian நன்றி கெட்டவர்களுக்கு எதற்காக பணம் கொடுத்து உதவ வேண்டும். இந்த பணத்திற்கு மொத்த இலங்கையையும் வாங்கி விடலாமே.
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
15-ஜன-202208:54:12 IST Report Abuse
நல்லவன் எங்களோட வரி பணத்தை, உங்களோட இஷ்ட்டத்துக்கு இரைக்கிறீங்களே. உலக வாங்கியில (வரும் தலைமுறையை அடகு வைத்து ) வாங்குன கடனை அடைங்கப்பா முதல்ல.. கடை தேங்காயை திருடி வழி பிள்ளையாருக்கு ஓடைக்காதிங்க... நல்லதில்லை.
Rate this:
Cancel
15-ஜன-202208:35:55 IST Report Abuse
ஆரூர் ரங் சீனாவிடம் இலங்கை வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி உதவ நம்மால்bill இயலவே இயலாது. அங்கு பொருளாதார சரிவால் பஞ்சம் பட்டினி ஏற்பட்டால் அகதிகள் இங்குதான்😪😪 தஞ்சமடைவர். முதல் பாதிப்பு மலையக இந்திய வம்சாவளி தமிழ்ர்களுக்குத்தான் .அவர்கள் இங்கு வருவதை நம்மால் தடுக்கவே முடியாது. திராவிஷக் கட்சி😡 களும் அதனை அரசியலாக்கப்பார்க்கும். இத்தனைக்கும் காரணம். அங்கு நுகர்வோர் கலாச்சார பெருக்கம்தான் . நாமும் அதே ஆபத்தான வழியில்தான் சென்று கொண்டிருக்கிறோம். நாம் முதலில் திருந்தவேண்டும். இல்லையெனில் நமக்கும் அதே கதி ஏற்படும். ஆனால் 130 கோடி அகதிகளுக்கு எந்த நாடாலும் அடைக்கலமளிக்க😇 முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X