பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை 2 நாட்களில் ரூ. 358 கோடி வசூல்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சென்னை-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில், 358 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 5,410 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது.அவற்றில் தினமும் சராசரிதயாக, 100 கோடி ரூபாய்க்கும்; வார விடுமுறை நாட்களில், அதைவிட அதிகமாகவும் மது விற்பனை ஆகின்றன. குறிப்பாக, தீபாவளி, புத்தாண்டு

சென்னை-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில், 358 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 5,410 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது.அவற்றில் தினமும் சராசரிதயாக, 100 கோடி ரூபாய்க்கும்; வார விடுமுறை நாட்களில், அதைவிட அதிகமாகவும் மது விற்பனை ஆகின்றன. குறிப்பாக, தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் தமிழகத்தில் மது விற்பனை களைகட்டும்.

அந்தவகையில், நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 12ம் தேதி, 155 கோடி ரூபாய்க்கும், நேற்று முன்தினம், 203 கோடி ரூபாய் என மொத்தம், 358 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.தொடர்ந்து அடுத்தடுத்து, மூன்று நாட்கள், 'டாஸ்மாக்' விடுமுறை என்பதால், குடிமகன்கள் விடுறை நாட்களுக்கும் சேர்த்து நேற்று, மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி சென்றனர்.அதேசமயம், பொங்கல் தினமான நேற்று 'டாஸ்மாக்' கடைகளில் காலை முதல் குடி பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

அதனால் நேற்று விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.3 நாட்கள் 'டாஸ்மாக் விடுமுறைஇன்று திருவள்ளூவர் தினம், நாளை முழுஊரடங்கு மற்றும் 18ல் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X