இரு போகம் விளையுமா நிலக்கடலை? நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்ததால் எதிர்பார்ப்பு| Dinamalar

இரு போகம் விளையுமா நிலக்கடலை? நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்ததால் எதிர்பார்ப்பு

Added : ஜன 15, 2022 | |
அவிநாசி:அவிநாசி வட்டாரத்தில், நிலத்திடி நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், இரு போகம் சாகுபடி செய்யப்படுவதற்கான சூழ்நிலை ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அவிநாசி, சேவூர் சுற்று வட்டார பகுதிகளில், ஆண்டுதோறும் செப். துவங்கி நவ., வரையிலான மூன்று மாதங்களுக்கு நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இந்த சீசனில், சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்

அவிநாசி:அவிநாசி வட்டாரத்தில், நிலத்திடி நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், இரு போகம் சாகுபடி செய்யப்படுவதற்கான சூழ்நிலை ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அவிநாசி, சேவூர் சுற்று வட்டார பகுதிகளில், ஆண்டுதோறும் செப். துவங்கி நவ., வரையிலான மூன்று மாதங்களுக்கு நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இந்த சீசனில், சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடக்கும் ஏலத்தில் நிலக்கடலை விற்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம், 10 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.கடந்தாண்டு மட்டும், 1,417 மெட்ரிக் டன் நிலக்கடலை, 10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. 3,105 விவசாயிகள், 205 வியாபாரிகள் பங்கேற்று பயனடைந்தனர். ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டுமே, நிலக்கடலை சீசன் களை கட்டியுள்ள நிலையில் எஞ்சிய மாதங்களில் நிலக்கடலை விளைவிக்கப்படுவதில்லை.மதிப்பு அதிகம்அவிநாசியில் விளையும் நிலக்கடலையில் எண்ணெய் சத்து அதிகம் இருப்பதால், எண்ணெய் தயாரிப்புக்கும், கடலை மிட்டாய் தயாரிப்புக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சமீப நாட்களாக, இத்தகைய மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்பில் பலரும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.எனவே, இருபோகம் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தினால், நிலக்கடலை வர்த்தகத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்ற யோசனை எழுந்துள்ளது.மழைப்பொழிவு அடிப்படையில் தான் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், நீர்வளம் பெருகினால் மட்டுமே, இரண்டாம் போக நிலக்கடலை சாகுபடிக்கு வாய்ப்புண்டு. அவிநாசியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே இது நிச்சயம் சாத்தியம்.ஆண்டுக்கு, 4 மாதம் மட்டுமே சீசன் உள்ளது; ஓராண்டில், 2,200 டன் வரை நிலக்கடலை வருகிறது. மொத்தம், 12 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. ஒரு கிலோ சராசரியாக, 66 முதல், 68 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இரு போகம் சாகுபடி செய்தால், வரத்தும், வருமானமும் இரு மடங்காகும்.- யுவராஜ், சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்.அவிநாசியில், மானாவாரி பயிராக நிலக்கடலை சாகுபடி செய்கின்றனர். சீசன் முடிந்த பின், கால்நடை தீவனமான சோளம் விதைக்கின்றனர். இருப்பினும், தண்ணீர் வசதியுள்ள தோட்டங்களில் நிலக்கடலை பயிரிடுகின்றனர்; இம்முறை, 100 ஏக்கர் வரை மட்டுமே இரண்டாம் போகம் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.- அருள்வடிவு, அவிநாசி வேளாண் உதவி இயக்குனர்.வட கிழக்கு பருவ மழை சரியாக இருக்காது என்பதால், இரண்டாம் போகம் விளைவிக்க, தண்ணீர் வசதி போதாது. இதனால் தான், 2ம் சீசனில், பயறு, உளுந்து, கொள்ளு போன்ற சிறு தானியங்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கிறோம். மாறாக, தண்ணீர் வளம் இருந்தால், 2ம் சீசன் விளைவிக்கலாம்.- அரசப்பன், மாவட்ட திட்ட ஆலோசகர், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X