கலர் கலராக கயிறும் சலங்கை, ஜிமிக்கியும்! மாட்டுப்பொங்கலுக்கு இதோ தயார்| Dinamalar

கலர் கலராக கயிறும் சலங்கை, ஜிமிக்கியும்! மாட்டுப்பொங்கலுக்கு இதோ தயார்

Added : ஜன 15, 2022
மாட்டுப் பொங்கலுக்கு கால்நடைகளை அலங்கரிக்கும் வண்ணக் கயிறுகள், சலங்கை, 'ஜிமிக்கி' என பல வகையான அணிகலன்களின் வரவு கவர்ந்துள்ளது.போகி, சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்பு உள்ளது. மாட்டுப் பொங்கலானது வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி, மாட்டு கொட்டகையில் பொங்கல் வைத்து, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு
 கலர் கலராக கயிறும்  சலங்கை, ஜிமிக்கியும்! மாட்டுப்பொங்கலுக்கு இதோ தயார்

மாட்டுப் பொங்கலுக்கு கால்நடைகளை அலங்கரிக்கும் வண்ணக் கயிறுகள், சலங்கை, 'ஜிமிக்கி' என பல வகையான அணிகலன்களின் வரவு கவர்ந்துள்ளது.போகி, சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்பு உள்ளது. மாட்டுப் பொங்கலானது வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி, மாட்டு கொட்டகையில் பொங்கல் வைத்து, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது.அன்றைய தினம் கால்நடைகளை குளிக்கவைத்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டப்படுகிறது. பலவகை அணிகலன்கள் கொண்டும் அலங்கரிக்கப்படுகிறது.இன்று மாட்டு பொங்கலுக்கு அலங்கரிக்க ஏதுவாக, வண்ணக் கயிறுகள், 'ஜல் ஜல்' ஒலி எழுப்பும் சலங்கைகள், ஜிமிக்கி உள்ளிட்ட புதிய அணிகலன்கள் விற்பனை நேற்று ஜோராக நடந்தது.ஆர்.ஜி.வீதி வியாபாரி மங்கேஷ் கூறியதாவது:மாட்டு பொங்கலன்று கால்நடைகளை அலங்கரித்து, மாதேஸ்வரன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்துச்செல்வர். இவ்வாண்டு கோவில்களில் அனுமதி இல்லாததால், பிரத்யேக அணிகலன்கள் வாங்குவது குறைந்துள்ளது. இருப்பினும், வழக்கமான பொருட்களின் விற்பனை நன்றாக நடந்துள்ளது. மாடுகளுக்கு கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, கருப்பு கயிறு, தலை கயிறு உள்ளிட்டவை ஒரு கிலோ, 200 ரூபாய் முதல் ரகங்களுக்கு ஏற்ப விற்பனையாகிறது. சலங்கை வகைகள் அளவுகளுக்கு ஏற்ப, 160 ரூபாய் முதலும் கிடைக்கின்றன. தவிர, ஏராளமான அணிகலன்களும் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X