உசிலம்பட்டி :உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் பொங்கல் விழா தாளாளர் பாண்டியன் தலைமையில் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா, முதல்வர் ரவி, துணை முதல்வர்கள் ஜோதிராஜன், ராமர், ஒருங்கிணைப்பாளர் பொன்ராம், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், இயற்கை வள பாதுகாப்பு குழுவினர் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.எழுமலை மள்ளப்புரம் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் பொங்கல் விழா நடந்தது. நிறுவனர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமராஜ், சுப்பிரமணி, பெருமாள், சென்னகிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ், நிர்வாக அலுவலர் சந்திரன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் கருப்பசாமி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சுபாராஜன், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் செல்வக்குமாரி, மெட்ரிக் பள்ளி முதல்வர் தனபாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலுார் தினசரி காய்கறி மார்க்கெட்டில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. சந்தை சங்கத் தலைவர் மணவாளன், கட்சியின் மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், ஜோசப், ஜமாத் தலைவர் சேட் பாபு, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE