விழுப்புரம் : மாடுகளுக்கு அலங்கார பொருட்கள் வாங்குவதற்கு விழுப்புரம் மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளை சீவி பெயிண்ட் அடித்து, அலங்கார கயிறு உள்ளிட்ட பொருட்களை கட்டி பூஜை செய்வது வழக்கம்.இதற்காக, விழுப்புரம் எம்.ஜி., ரோடு மார்க்கெட்டில் அலங்கார பொருட்கள் நேற்று விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டது. இவற்றை வாங்குவதற்காக விழுப்புரம் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால், மார்க்கெட் சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.