முன்னாள் கல்லுாரி மாணவர்கள் உபகரணங்கள் வழங்கல்| Dinamalar

முன்னாள் கல்லுாரி மாணவர்கள் உபகரணங்கள் வழங்கல்

Added : ஜன 15, 2022
விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் உபகரணங்கள் வழங்கினர்.விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் 1987-90ம் ஆண்டில் வேதியியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு துறைத்தலைவர் டாக்டர் பூபதி தலைமை தாங்கினார். டாக்டர்கள் யசோதை வைத்திலிங்கம், பேராசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள்

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் உபகரணங்கள் வழங்கினர்.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் 1987-90ம் ஆண்டில் வேதியியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு துறைத்தலைவர் டாக்டர் பூபதி தலைமை தாங்கினார். டாக்டர்கள் யசோதை வைத்திலிங்கம், பேராசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் நந்தா நெடுஞ்செழியன் வரவேற்றார்.முன்னாள் மாணவர்கள் சார்பில் போளூர் டி.எஸ்.பி., அறிவழகன் கல்லுாரி வகுப்பறைக்கு 100 பிளாஸ்டிக் சேர்கள் தண்ணீர் சுத்திகரிப்பான் மிஷின் வழங்கி பேசினார்.முன்னாள் மாணவர்கள் முரளிதரன், ஜோதி, செந்தில் முருகன், சந்திரசேகரன் தண்டபாணி வெளிநாடு வாழ் முன்னாள் மாணவர்கள் பொன்னியரசு, ஆறுமுகம், குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X