பொது செய்தி

தமிழ்நாடு

என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆயிடுச்சு!

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக படுமோசமாக இருப்பதை கிண்டலடித்து, சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்' பரவி வருகிறது.கோவை மாநகர பகுதியில் உள்ள ரோடுகளை புதுப்பிக்கவும், 'பேட்ச் ஒர்க்' போடவும், சட்டசபை தேர்தலுக்கு முன், அவசர அவசரமாக டெண்டர் விடப்பட்டது. தேர்தலுக்கு பின், அந்த ரோடு பணிக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.ஏற்கனவே போடப்பட்ட பல ரோடுகளின்
 என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆயிடுச்சு!

கோவை:கோவை மாநகராட்சி பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக படுமோசமாக இருப்பதை கிண்டலடித்து, சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்' பரவி வருகிறது.கோவை மாநகர பகுதியில் உள்ள ரோடுகளை புதுப்பிக்கவும், 'பேட்ச் ஒர்க்' போடவும், சட்டசபை தேர்தலுக்கு முன், அவசர அவசரமாக டெண்டர் விடப்பட்டது. தேர்தலுக்கு பின், அந்த ரோடு பணிக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.ஏற்கனவே போடப்பட்ட பல ரோடுகளின் தரம், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவை நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாததால், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கைக்கு மாநகராட்சி பரிந்துரைத்தது.நிதி பற்றாக்குறையால் புதிதாக ரோடு போடாமல் மாநகராட்சி தாமதித்து வந்ததால், மழை பெய்த போது, சிறிதாக இருந்த குழிகள் பெரிய பள்ளமாக மாறின. போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், ஏராளமான ரோடுகள் இருக்கின்றன. குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதிக்க திரும்ப திரும்ப தோண்டுவதால், ரோடு படுமோசமாக இருக்கின்றன.விளாங்குறிச்சி ரோடு மோசமாக இருப்பதால், கிண்டலடித்து, சமூக வலைதளத்தில், 'மீம்ஸ்' பரப்பப்படுகிறது. அதில், 'எனது மகளுக்கு சுகப்பிரசவம் ஆகாது. சிசேரியன்தான்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க' 'அப்புறம்தான் விளாங்குறிச்சி ரோட்டை பத்தி கேள்விப்பட்டேன்''அந்த ரோட்டுல ரெண்டு தடவை பஸ்சுல கூட்டிட்டு போனேன். இப்ப, சுகப்பிரசவம் ஆயிடுச்சு. தாயும் பிள்ளையும் நல்லா இருக்காங்க'இவ்வாறு, கிண்டலடித்திருக்கின்றனர்.தற்போது, நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தில், சில ரோடுகள் மட்டும் புதுப்பிக்கப்படுகின்றன. எங்கெல்லாம் மோசமாக இருக்கென கணக்கெடுத்து, இனியாவது மாநகராட்சி ரோடு போட்டால் தேவலை!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X