உசிலம்பட்டி, :உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் மூலம் 28 கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைத்தது. மீதமுள்ள ஏழு கண்மாய்களுக்கும் தண்ணீர் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.உசிலம்பட்டி பகுதிக்கான நீராதார திட்டமான 58 கிராம கால்வாய் திட்டம் நிறைவுபெற்று கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி பகுதியில் 33 கண்மாய்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 கண்மாய்கள் என 35 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். கடந்த நவ.,13ல் தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது 28 கண்மாய்களுக்கு தண்ணீர் சேர்ந்துள்ளது.கடைமடை பகுதிகளான வகுரணி, குருவிளாம்பட்டி, வடுகபட்டி, பூதிப்புரம், எ.கிருஷ்ணாபுரம், ஆனையூர் பெரிய கண்மாய், சடச்சிட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வேண்டியுள்ளது.நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு மழைப்பொழிவு குறைந்துள்ளதால் கால்வாயில் தண்ணீர் வருவதற்கு முன்பாக அனைத்து கண்மாய்களும் வறண்டு கிடந்தன. ஒவ்வொரு கண்மாய் நிரம்பி அடுத்த கண்மாய்க்கு செல்லும் நீர் வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை, போலீசார், பொதுப்பணித்துறையினர்இணைந்து அகற்றி தண்ணீர் கொண்டு செல்கின்றனர்.திம்மநத்தம் கண்மாயில் இருந்து சடச்சிபட்டி கண்மாய்க்கு செல்ல வேண்டிய நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இம்மாதம் வரை கால்வாயில் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதால் அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE