வாகனம் மோதி அண்ணன் - தங்கை பலி| Dinamalar

வாகனம் மோதி அண்ணன் - தங்கை பலி

Added : ஜன 15, 2022 | |
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் இறந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் மணிகண்டன், 24; கட்டட தொழிலாளி.அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகள் உதயலட்சுமி, 19; தங்கை உறவு முறையான இவரை நேற்று இரவு, செங்குறிச்சியிலிருந்து உளுந்துார்பேட்டை நோக்கி பைக்கில் அழைத்துச்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் இறந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் மணிகண்டன், 24; கட்டட தொழிலாளி.அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகள் உதயலட்சுமி, 19; தங்கை உறவு முறையான இவரை நேற்று இரவு, செங்குறிச்சியிலிருந்து உளுந்துார்பேட்டை நோக்கி பைக்கில் அழைத்துச் சென்றார். இரவு 7:00 மணியளவில் டோல்கேட் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே உதயலட்சுமி இறந்தார்.

படுகாயமடைந்த மணிகண்டன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் 9:00 மணியளவில் இறந்தார்.உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X