பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பெருகியது தெருநாய்க்கடி! நிதியின்றி முடங்கியது கருத்தடை பணி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கோவை;கருத்தடை செய்யும் பணி முடங்கியுள்ளதால், கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. பொதுமக்கள் நலனும் சம்பந்தப்பட்டிருப்பதால், உடனடியாக தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடவும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 88ம் வார்டு குனியமுத்துார் கே.ஜி.கே., ரோட்டில் அர்ச்சனா நகர் குடியிருப்பு
 கொரோனாவால் பெருகியது தெருநாய்க்கடி! நிதியின்றி முடங்கியது கருத்தடை பணி

கோவை;கருத்தடை செய்யும் பணி முடங்கியுள்ளதால், கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. பொதுமக்கள் நலனும் சம்பந்தப்பட்டிருப்பதால், உடனடியாக தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடவும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 88ம் வார்டு குனியமுத்துார் கே.ஜி.கே., ரோட்டில் அர்ச்சனா நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுற்றித்திரிந்த வெறிநாய், 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள், வீட்டு நாய்களை கடித்து குதறி விட்டது.வெறிநாய் இறந்து விட்ட நிலையில், அது கடித்து குதறிய மற்ற நாய்களுக்கும், வெறிநோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த நாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி தரப்பில் யாரும் முன் வர மறுக்கின்றனர்.பொதுமக்கள் கடும் அதிருப்திஅச்சம் அடைந்த குடியிருப்போர், மாநகராட்சிக்கும், ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கும் மாற்றி மாற்றி போன் செய்து சலிப்படைத்துள்ளனர். கோவையில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போடும் பணி, மாநகராட்சி சார்பில் வெவ்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தெற்கு மண்டல பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் 'பிராணி மித்ரன்' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் வல்லையப்பன் கூறியதாவது:கொரோனா காரணமாக, மக்கள், அரசு கவனம் திசை மாறியிருப்பதால், அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை தொடர்ந்து செய்திருக்க வேண்டும்.எல்லாம் பழுதாகி கிடக்கிறதுநான்காண்டுகளாக அந்த பணி நடக்கவில்லை. நான் வந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. வாகனங்கள் இரண்டும் பழுதாக உள்ளன. நாய்க்கூண்டும் பழுதாக இருக்கிறது. அவற்றை சரி செய்ய ஏற்பாடு செய்துள்ளேன்.தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு மீண்டும் அதே இடத்தில் கொண்டு சென்று விட, மாநகராட்சி, 445 ரூபாய் தருகிறது. இது, 20 ஆண்டுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தொகை. இப்போது ஒரு நாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.மீதமுள்ள தொகைக்கு, ஸ்பான்சர் பிடிக்க வேண்டியுள்ளது. ஸ்பான்சர் கிடைத்தவுடன் முதலில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்கிறோம். பின்னர் கருத்தடை செய்வதற்கு பணிகள் நடக்கும். ஒரு சில மாதங்களில் நிலைமையை சீராக்கி விடுவோம்.இவ்வாறு, டாக்டர் வல்லையப்பன் கூறினார்.அப்படியானால், அதுவரை கடி வாங்க வேண்டியதுதானா?மாநகராட்சிக்கு உட்பட்ட 88ம் வார்டு குனியமுத்துார் கே.ஜி.கே., ரோட்டில் அர்ச்சனா நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுற்றித்திரிந்த வெறிநாய், 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள், வீட்டு நாய்களை கடித்து குதறி விட்டது. வெறிநாய் இறந்து விட்ட நிலையில், அது கடித்து குதறிய மற்ற நாய்களுக்கும் வெறிநோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த நாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி தரப்பில் யாரும் முன் வர மறுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X