கிரைம் செய்திகள்...

Added : ஜன 15, 2022
Share
Advertisement
லாரி மீது பைக் மோதி ஒருவர் பலிவிழுப்புரம்: டி.முத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 52; இவர், நேற்று முன்தினம் பைக்கில், செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்தார். பூத்தமேடு இ.பி., அலுவலகம் அருகே டாராஸ் லாரி மீது பைக் மோதியது. படுகாயமடைந்த வேல்முருகன் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார்

லாரி மீது பைக் மோதி ஒருவர் பலி

விழுப்புரம்: டி.முத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 52; இவர், நேற்று முன்தினம் பைக்கில், செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்தார். பூத்தமேடு இ.பி., அலுவலகம் அருகே டாராஸ் லாரி மீது பைக் மோதியது. படுகாயமடைந்த வேல்முருகன் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

சுவர் இடிந்து முதியவர் பலி

விழுப்புரம்: வி.அகரம் காலனியைச் சேர்ந்தவர் வீரப்பன், 80; இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், வீரப்பன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த தணிகலாம்பட்டைச் சேர்ந்தவர் எத்திராசு. இவரது 17 வயது மகளைக் கடந்த 12ம் தேதி இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தம்பி தாக்கு: அண்ணன் மீது வழக்கு

விழுப்புரம்: குடுமியான்குப்பத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 43; இவரது தம்பி அய்யனார், 37; இருவருக்குமிடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 12ம் தேதி குப்பையை வீட்டுமனையில் தள்ளியதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அய்யனார், சக்திவேலை திட்டி தாக்கினார்.புகாரின்பேரில், அய்யனார் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வாலிபர் தாக்கு: 8 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: ஏ.கே., குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அறிவழகன், 27; இவர், நேற்று முன்தினம் பஞ்சமாதேவி மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, வி.அகரம் காலனியைச் சேர்ந்த துரை, அதியமான், ராமலிங்கம் மகன் பத்மநாபன், 18; புருஷோத்தமன், ஜீவானந்தம் மகன் விக்னேஷ், 17; பிரவின்குமார், முல்லைவேந்தன், சரண்ராஜ் ஆகியோர் அறிவழகனை வழிமறித்து திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில், துரை உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து பத்மநாபன், விக்னேைஷ கைது செய்தனர்.

மனைவி இறந்த சோகம்; கணவர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: சுந்தர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், 70; இவரது மனைவி மல்லிகா. கடந்த ஓராண்டுக்கு முன், உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த கண்ணன், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X