பொது செய்தி

தமிழ்நாடு

மர சிற்பங்களுக்கு புகழ் பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : மர சிற்பங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் புகழ்பெற்றதாக விளங்குகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அண்ணா நகர், தென்கீரனுார், ஜெ.ஜெ., நகர், திருக்கோவிலுார், தகடி, கூத்தனுார், சின்னசேலம் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட மர சிற்ப கலைஞர்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மர சிற்பங்கள் தயாரிக்கும் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.சந்தனம்,

கள்ளக்குறிச்சி : மர சிற்பங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அண்ணா நகர், தென்கீரனுார், ஜெ.ஜெ., நகர், திருக்கோவிலுார், தகடி, கூத்தனுார், சின்னசேலம் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட மர சிற்ப கலைஞர்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மர சிற்பங்கள் தயாரிக்கும் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.சந்தனம், இலுப்பை, மாவிலங்கை, வாகை, அத்தி, வேங்கை, ஈட்டி போன்ற மரங்களில் சுவாமி சிலைகள் மற்றும் கோவில்களுக்கு தேவையான ரதம், உற்சவர் வாகனம், காவடி, கோவில் கதவுகள் செய்து வருகின்றனர்.

வீடுகளுக்குத் தேவையான சுவாமி சிற்பங்களும் செய்து தருகின்றனர்.சிற்பங்களை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மும்பை, டில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். மேலும், இங்கு செய்யப்படும் சிலைகள் பல்வேறு இடங்களில் தேசிய அளவில் நடைபெறும் பொருட்காட்சியகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மர சிற்பம் தயாரிப்போர் கைவினை தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கம், சின்னசேலம், விருக்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சி ஆகிய இரு அமைப்புகளின் விண்ணப்பத்தையும் ஏற்ற மத்திய அரசின் தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையின் சார்பாக புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற மரசிற்ப கலைஞர்கள் பயன்பெறும் வகையில் அனைவருடைய சிற்பங்களையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் விதமாக காட்சி திடல் ஒன்றினை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X