பொது செய்தி

தமிழ்நாடு

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... சினிமா பாணியில் விழிப்புணர்வு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பல்லடம்;'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...' என, பல்லடம் போக்குவரத்து போலீசார், சினிமா பாணியில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசு சார்பில்
 திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... சினிமா பாணியில் விழிப்புணர்வு

பல்லடம்;'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...' என, பல்லடம் போக்குவரத்து போலீசார், சினிமா பாணியில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர, அரசுத்துறைகள் சார்பிலும் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் போக்குவரத்து போலீசார், நுாதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்துள்ளனர். அதில், தாராபுரம் ரோடு பிரிவு அருகே வைக்கப்பட்டுள்ள பேனர், வாகன ஓட்டிகளை கவர்ந்துள்ளது.
கடந்த, 2020ல் வெளியான கபாலி திரைப்படத்தில், 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு,' என, நடிகர் ரஜினி வசனம் பேசுவார். அதே வசனத்தை, ஒமைக்ரான் சொல்லுவதுபோல் சித்தரித்து, அருகே, கொரோனா தலையுடன் நிற்கும் எமதர்மன் கையில் பாசக்கயிறு வைத்திருப்பது போன்றும் படம் உள்ளது.இதன் கீழ், கொரோனாவை விரட்ட கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரபல வசனத்தை மாற்றி வைக்கப்பட்டுள்ள இந்த பேனர், வாகன ஓட்டிகள் பலரையும் கவர்ந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X