பொது செய்தி

தமிழ்நாடு

'சளி, காய்ச்சலால் பள்ளிக்கு லீவா...

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கோவை:பள்ளிகளில் காய்ச்சல், சளி பாதிப்பால் விடுமுறை எடுப்பவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் தலைமையாசிரியர்களிடம் தகவல் அளிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவுறுத்தியுள்ளார். கடந்த, செப்., மாதம் முதல் தினந்தோறும் பள்ளிகள் வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெறப்பட்டது. ஆனால் நவ.,

கோவை:பள்ளிகளில் காய்ச்சல், சளி பாதிப்பால் விடுமுறை எடுப்பவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் தலைமையாசிரியர்களிடம் தகவல் அளிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவுறுத்தியுள்ளார். கடந்த, செப்., மாதம் முதல் தினந்தோறும் பள்ளிகள் வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெறப்பட்டது. ஆனால் நவ., மாதம் பாதிப்புகள் இல்லை என்பதால், பட்டியல் பெறுவது நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக பாதிப்புகள் ஆங்காங்கே பதிவாகி வருகின்றன. கடந்த வாரத்தில், ஆறு ஆசிரியர்கள், ஒரு மாணவர் என ஏழு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சி.இ.ஓ., கீதா கூறியதாவது:இதுவரை ஏழு பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் காய்ச்சல், இருமல், சளி இருப்பின் பள்ளிக்கு வருவதை தவிர்ப்பதுடன், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், ஆசிரியர்கள் நேரடியாகவும், மாணவர்கள் பெற்றோர் வாயிலாகவும் தகவலை தாமதிக்காமல், தலைமையாசிரியருக்கு தெரிவிக்க வேண்டும். 15 வயது முதல் 18 வயதுள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில், 80 சதவீதம் பேர் முதல் 'டோஸ்' தடுப்பூசி செலுத்தி விட்டனர். மீதமுள்ள சிலர் விடுமுறையில் உள்ளனர். விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X