சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுருக்கில் சிக்கி சிறுத்தை பலி:குன்னூரில் இருவர் கைது

Added : ஜன 15, 2022
Share
Advertisement
குன்னுார்---குன்னுார் தேயிலை தோட்டத்தில் சுருக்கில் சிக்கி சிறுத்தை பலியானது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் உலிக்கல், பார்க்சைட் எஸ்டேட் பகுதியில், ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது. இது தொடர்பாக, வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மூன்று வயதுள்ள ஆண் சிறுத்தையின் கழுத்தில் சுருக்கு மாட்டி இறந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.குன்னுார்
 சுருக்கில் சிக்கி சிறுத்தை பலி:குன்னூரில் இருவர் கைது

குன்னுார்---குன்னுார் தேயிலை தோட்டத்தில் சுருக்கில் சிக்கி சிறுத்தை பலியானது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் உலிக்கல், பார்க்சைட் எஸ்டேட் பகுதியில், ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது. இது தொடர்பாக, வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மூன்று வயதுள்ள ஆண் சிறுத்தையின் கழுத்தில் சுருக்கு மாட்டி இறந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.குன்னுார் ரேஞ்சர் சசிகுமார் தலைமையில் நடந்த விசாரணையில், உலிக்கல் பில்லுார்மட்டத்தை சேர்ந்த மாரியப்பன், 39, குமார், 53, ஆகியோர் சுருக்கு வைத்தது தெரியவந்தது. வனத்துறையினர் கூறுகையில்,'விவசாய தோட்டத்தில் காட்டு பன்றிக்கு வைத்த சுருக்கில், சிறுத்தை குட்டி சிக்கி பலியாகியுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு, குன்னுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கூடலுார் சிறையில் அடைக்கப்பட்டனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X