பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ. 54 லட்சம் ஊக்கத்தொகை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்:போக்குவரத்து கழக திருப்பூர் மண்டலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ரூ. 54 லட்சம் ஊக்கத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி, சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. 91 நாட்கள் மற்றும் அதற்கு மேல், 151 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு, 55 ரூபாய். 151

திருப்பூர்:போக்குவரத்து கழக திருப்பூர் மண்டலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ரூ. 54 லட்சம் ஊக்கத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி, சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. 91 நாட்கள் மற்றும் அதற்கு மேல், 151 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு, 55 ரூபாய். 151 நாட்களுக்கு மேல், 200 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்தவர்களுக்கு, 195 ரூபாய். மேலும், 200 நாட்கள் மற்றும் அதற்குமேல் பணிபுரிந்தவர்களுக்கு, 625 ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது.அதன்படி, மாநிலம் முழுதும், 11 லட்சம் தொழிலாளர்களுக்கு, ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தாராபுரம், பழநி, பல்லடம், திருப்பூர் 1 மற்றும் 2 உள்ளிட்ட எட்டு உட்கோட்டங்களை உள்ளிட்ட திருப்பூர் மண்டலத்தில், 8,500 பேர் பணிபுரிகின்றனர்; இவர்களுக்கு வழங்க, 54 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'டிரைவர், நடத்துனர் அரசு அறிவிப்பின் கீழ் ஊக்கத்தொகை பெற தகுதியானவர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிளை வாரியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X