கோவை:தேசிய அளவிலான 'சப் - ஜூனியர்' பூப்பந்தாட்ட போட்டியில், கோவை வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், 40வது தேசிய 'சப் - ஜூனியர்' பூப்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு மாநில பூப்பந்தாட்ட அணிகள் பங்கேற்றன.இதில் சிறுமியர் பிரிவின் இறுதிப்போட்டியில், ஆந்திர மாநில அணியை எதிர்த்து விளையாடிய தமிழக அணி, 35 -- 28, 28 - 35, 35 - 28 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதல் இடத்தை பிடித்தது. தமிழக அணியில், கோவை பள்ளி மாணவி சிதிக்ஷா சிறப்பாக விளையாடி தமிழக அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.இதே போல் சிறுவர்கள் பிரிவில், தமிழக அணி இறுதிப் போட்டியில், தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தை பிடித்தது.தேசிய போட்டியில் சிறப்பாக விளையாடிய, கோவை மாணவி மற்றும் தமிழக பூப்பந்தாட்ட அணி வீரர்களுக்கு, கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தினர் பாராட்டி வாழ்த்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE