பொது செய்தி

தமிழ்நாடு

பிரின்டிங் மெஷின் கொள்முதலுக்கு ஆயத்தம்: செயல்பாட்டுக்கு வரும் பயன்பாட்டு மையம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்;முதல்கட்டமாக ஆறு பிரின்டிங் மெஷின்களை கொள்முதல் செய்து, அப்பேரல் கிளஸ்டர் எனப்படும் பிரின்டிங் பொது பயன்பாட்டு மையத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகள் நடந்துவருகின்றன.திருப்பூரிலுள்ள 40 பின்னலாடை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, 'அப்பேரல் கிளஸ்டர்' என்கிற பெயரில் பிரின்டிங் பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டுவருகிறது. இதற்காக,

திருப்பூர்;முதல்கட்டமாக ஆறு பிரின்டிங் மெஷின்களை கொள்முதல் செய்து, அப்பேரல் கிளஸ்டர் எனப்படும் பிரின்டிங் பொது பயன்பாட்டு மையத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகள் நடந்துவருகின்றன.திருப்பூரிலுள்ள 40 பின்னலாடை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, 'அப்பேரல் கிளஸ்டர்' என்கிற பெயரில் பிரின்டிங் பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டுவருகிறது. இதற்காக, பழவஞ்சிபாளையத்தில், 2 ஏக்கர் நிலம் லீசுக்கு பெறப்பட்டு, பொது பயன்பாட்டு மைய கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன.மொத்தம், 16.25 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் இம்மையத்துக்கு, மத்திய அரசு 70 சதவீதம்; மாநில அரசு 10 சதவீதம் மானியம் வழங்குகின்றன. தொழில் துறையினர் 20 சதவீத பங்களிப்பு தொகையை அளிக்கின்றனர்.கட்டுமான பணிகள் முடிந்துள்ளதால், முதல்கட்ட மெஷின் கொள்முதலுக்கு தொழில் துறையினர் தயாராகிவருகின்றனர்.இது குறித்து, பொதுபயன்பாட்டு மைய நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது:சப்ளிமேஷன், செஸ்ட் பிரின்ட், கிளாஸ்டேபிள் வித் க்யூரிங், டிஜிட்டல் என, 12 வகையான அதிநவீன பிரின்டிங் மெஷின்களை இம்மையத்தில் நிறுவ உள்ளோம். தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமும் செயல்படுத்தப்படும்.ரவுன்ட் பிரின்டிங் மெஷின் - 5, ஓவல் பிரின்டிங் மெஷின் ஒன்று என, மொத்தம், ஆறு மெஷின் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட உள்ளது. விரைவில் மெஷின் வாங்கப்பட்டு, வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் பொது பயன்பாட்டு சேவை மையத்தை இயக்கத்துக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். ஆயத்த ஆடைகளில் இடம்பெறும் பிரின்டிங், ஆடைகளின் மதிப்பை கூட்டுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X