தொடர் விடுமுறையால் தடுப்பூசி முகாம் ஒத்திவைப்பு | Dinamalar

தொடர் விடுமுறையால் தடுப்பூசி முகாம் ஒத்திவைப்பு 

Added : ஜன 15, 2022
திருப்பூர்:பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக இன்று நடக்கவிருந்த, 19ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை நடந்த, 18 கட்ட மெகா முகாமில், 20 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று பொங்கல் பண்டிகை, இன்று மாட்டுப்பொங்கல், நாளை (16ம் தேதி) உழவர் திருநாள் கொண்டாப்படுகிறது.அடுத்த இரு நாட்களான, 17, 18 விடுமுறை

திருப்பூர்:பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக இன்று நடக்கவிருந்த, 19ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை நடந்த, 18 கட்ட மெகா முகாமில், 20 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று பொங்கல் பண்டிகை, இன்று மாட்டுப்பொங்கல், நாளை (16ம் தேதி) உழவர் திருநாள் கொண்டாப்படுகிறது.அடுத்த இரு நாட்களான, 17, 18 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், 19ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, சனிக்கிழமை (இன்று) நடக்கும் முகாம் இந்த வாரம் இல்லை. அடுத்த மெகா தடுப்பூசி முகாம் வரும், 22ம் தேதி நடக்குமென மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.33 லட்சம் தடுப்பூசி மாவட்டத்தில் இதுவரை, 17 லட்சத்து, 23 ஆயிரத்து, 401 ஆண்கள், 15 லட்சத்து, 95 ஆயிரத்து, 228 பெண்கள், 64 ஆயிரத்து, 922 சிறுவர்கள் என மொத்தம், 33.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் வேகம் (97 சதவீதம்) தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. ஆனால், இரண்டாம் தவணை தடுப்பூசியை (65 சதவீதம்)செலுத்தியவர் சதவீதம் உயரவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X