பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் காற்று தரம் திருப்திகரம்! போகியால் அதிக பாதிப்பில்லை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கோவை;போகி பண்டிகையால் காற்று மாசுபடவில்லை என்பது, கோவையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.போகிப் பண்டிகையை முன்னிட்டு, வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், குப்பைகளுக்கு தீயிட்டு கொளுத்துவதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பர். இவற்றுடன் பழைய டயர்களையும் எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது.இதனால் போகிப்பண்டிகையை

கோவை;போகி பண்டிகையால் காற்று மாசுபடவில்லை என்பது, கோவையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.போகிப் பண்டிகையை முன்னிட்டு, வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், குப்பைகளுக்கு தீயிட்டு கொளுத்துவதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பர். இவற்றுடன் பழைய டயர்களையும் எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது.இதனால் போகிப்பண்டிகையை முன்னிட்டு குப்பை, டயர், பழைய பொருட்களுக்கு தீ வைப்பது தவறு என்றும், மீறி தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் ஆண்டு தோறும் எச்சரிக்கை விடப்படுகிறது. விளைவு, போகிக்கு குப்பை கொளுத்துவதும், காற்று மாசுபடுவதும் குறைந்திருக்கிறது.மாற்றத்துக்கு காரணம் கொரோனாகொரோனா அச்சம் காரணமாக கொண்டாட்டங்கள் குறைந்து போனதும், இந்த நல்ல மாற்றத்துக்கு முக்கிய காரணம். கோவை மாநகரில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு காற்று தரக்குறியீடு, 74 புள்ளிகளாக இருந்தது.இது, மாலை 6:00 மணிக்கு 75 ஆகவும், இரவு 8:00 மணிக்கு 74 ஆகவும், இரவு 10:00 மணிக்கு 73 ஆகவும், நள்ளிரவு 12:00 மணிக்கு 65 ஆகவும் இருந்தது. 'இது வழக்கமாக கோவையில் இருக்கும் காற்று மாசுபாடுதான். போகி காரணமாக மாறுபாடு எதுவும் ஏற்படவில்லை' என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.நேற்று காலை, கோவை மாநகரில் காற்றின் தரம் மேலும் சற்று உயர்ந்து காணப்பட்டது. காலை 6:00 மணிக்கு தரக்குறியீடு 62 ஆகவும், 8:00 மணிக்கு 60 ஆகவும், பகல் 12:00 மணிக்கு 56 ஆகவும் இருந்தது.பொங்கல் பண்டிகை காரணமாக, வாகன போக்குவரத்து இல்லாததும், தொழில் நிறுவனங்களின் செயல்பாடு இல்லாததும், காற்று தரக்குறியீடு உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.மோசம் என்றால் என்ன?திருப்தி என்றால் என்ன?காற்றில் காணப்படும் மாசுக்களான பி.எம்.,10 நுண்துகள், பி.எம்.,2.5 நுண்துகள், நைட்ரஜன் டைஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, கார்பன், ஓசோன், அம்மோனியா, காரீயம் ஆகியவற்றின் 24 மணி நேர சராசரியின் அடிப்படையில், காற்று தரக்குறியீடு, 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.தரக்குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால், நல்ல காற்று என்றும், 51 முதல் 100 வரை இருந்தால், காற்றின் நிலை திருப்திகரம் என்றும் அர்த்தம். 101 முதல் 200 வரை தரக்குறியீடு இருந்தால், மிதமான மாசு என்றும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசம் என்றும், 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையான பாதிப்பு என்றும் அர்த்தம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X