பா.ஜ., கிளைகளில் பொங்கல் விழாகோவை மாவட்ட பா.ஜ., சார்பில், 25 கிளைகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துடியலுார் பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் மாவட்ட தலைவர் நந்தகுமார், உக்கடம் பகுதில் நடந்த விழாவில், பா.ஜ., மண்டல தலைவர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர். மாநகர் மாவட்டத்தில் உள்ள, 25 கிளை அலுவலகங்களில் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, சிறப்பாக கொண்டாடினர்.பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் கலைச்செல்வன், ஊடக பிரிவு மாநில தலைவர் சபரி கிரீஸ், உக்கடம் மகளிர் அணி பிரிவு தீபிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பி.பி.ஜி.,யில் பொங்கல் விழா பி.பி.ஜி., கல்வி குழுமங்களின் சார்பில் பொங்கல் விழா நடந்தது. சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, கலைக் கல்லுாரி மற்றும் நர்சிங் கல்லுாரிகள் சார்பில் பொங்கல் விழா நேற்று முன் தினம் நடந்தது. விழாவிற்கு கல்லுாரி தாளாளர் சாந்தி தங்கவேலு, அறங்காவலர்கள் அக்சய், அபர்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.போலீஸ் பொங்கல் கோவை மாநகர ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று பொங்கல் விழா நடந்தது. புத்தாடை அணிந்த போலீசார், பொங்கலிட்டு சூரியனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற கமிஷனர் பிரதீப் குமார், போலீசார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். அனைவருடனும் கலந்துரையாடினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE