பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலை கோவிலில் இன்று திருவூடல் விழா

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருவண்ணாமலை-இல்லற வாழ்வில், 'ஊடலுக்கு பின் கூடல்' என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருவூடல் விழா நடக்கிறது. அருணாசலேஸ்வரர் தரிசனம் வேண்டி, பிருங்கி மகிரிஷி முனிவர், திருவண்ணாமலை கிரிவல பாதையில் தவமிருந்தார். அவருக்கு காட்சி அளிக்க அருணாசலேஸ்வரர் புறப்படும்போது, பராசக்தி அம்மன், தன்னையும் சேர்த்து வணங்காத பிருங்கி மகிரிஷிக்கு காட்சி

திருவண்ணாமலை-இல்லற வாழ்வில், 'ஊடலுக்கு பின் கூடல்' என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருவூடல் விழா நடக்கிறது.

அருணாசலேஸ்வரர் தரிசனம் வேண்டி, பிருங்கி மகிரிஷி முனிவர், திருவண்ணாமலை கிரிவல பாதையில் தவமிருந்தார். அவருக்கு காட்சி அளிக்க அருணாசலேஸ்வரர் புறப்படும்போது, பராசக்தி அம்மன், தன்னையும் சேர்த்து வணங்காத பிருங்கி மகிரிஷிக்கு காட்சி தரக்கூடாது எனக் கூற, அதை மீறி அருணாசலேஸ்வரர் செல்ல, இதனால், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன் இடையே ஏற்படும் திருஊடல் நிகழ்வு, இன்று மாலை மாட வீதியில் நடக்க உள்ளது.

இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில், சுந்தரமூர்த்தி நாயனார் ஈடுபட, சமாதானம் ஆகாத அருணாசலேஸ்வரர், பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க செல்வார். வழியில் குமரக்கோவிலில் இன்று இரவு தங்கி, நாளை 16ம் தேதி கிரிவலம் சென்று, பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுப்பார். அப்போது, அருணாசலேஸ்வரர் வழியில் கொள்ளையர்களிடம் நகையை பறிகொடுத்து, கோவில் திரும்புவார்.

அப்போது, பராசக்தி அம்மன், அருணாசலேஸ்வரரிடம், தம்மை மதிக்காத பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்ததால் தான், நகையை பறிகொடுக்கும் நிகழ்வு நடந்ததாக கூறி, மறுவூடல் நிகழ்வு நடக்கும். இதையடுத்து, தன் தவறை உணர்ந்து பிருங்கி மகரிஷி, பராசக்தி அம்மன் மற்றும் அருணாசலேஸ்வரரையும் சேர்த்து வழிபடுவார் என, தல புராணங்கள் கூறுகின்றன. இந்த விழா, இன்று பக்தர்களுக்கு அனுமதியின்றி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X