பொது செய்தி

இந்தியா

கார்களில் 6 'ஏர் பேக்' இனி கட்டாயம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
புதுடில்லி-“எட்டு பேர் வரை பயணிக்கும் வாகனங்களில் குறைந்தபட்சம் ஆறு 'ஏர் பேக்'குகள் இருப்பதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, கார்களில் உள்ள ஏர் பேக் எனப்படும், காற்றடைக்கப்பட்ட பை வசதிகள்

புதுடில்லி-“எட்டு பேர் வரை பயணிக்கும் வாகனங்களில் குறைந்தபட்சம் ஆறு 'ஏர் பேக்'குகள் இருப்பதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, கார்களில் உள்ள ஏர் பேக் எனப்படும், காற்றடைக்கப்பட்ட பை வசதிகள் குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கார்களில், ஓட்டுனரின் இருக்கைக்கு முன் ஏர் பேக் வசதி இருப்பதை மத்திய அரசு ஏற்கனவே கட்டாயமாக்கி உள்ளது. அது, 2019 ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. ஓட்டுனருக்கு அருகில் உள்ள இருக்கைக்கு முன், ஏர் பேக் வசதி இருப்பது, கடந்த 1ம் தெதி முதல் கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில் கார்களில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், மற்றொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எட்டு பேர் வரை பயணிக்கும் வாகனங்களில் குறைந்தபட்சம் ஆறு ஏர் பேக்குகள் இருப்பதை கட்டாயமாக்குவது குறித்து முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X