சிதம்பரம் -சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டார்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து சுரங்கவியல் பட்டயப் படிப்பு நடத்தி வருகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டார். இந்தப் பட்டயப் படிப்பில் பொதுவான 30இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்கான 30 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகிய இரண்டையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் துணைவேந்தர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பதிவாளர் சீத்தாராமன்மற்றும் பேராசிரியர் ராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE