நெல் கொள்முதல் விலை குறைவு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருவாடானை நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாடானை தாலுகாவில் நடப்பாண்டில் 65 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.மழையால் பெரும்பாலான நிலங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் அறுவடை பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தண்ணீரை வெளியேற்றி தற்போது அறுவடையில் ஈடுபட்டுஉள்ளனர்.இந்நிலையில் திருவாடானை, நீர்க்குன்றம்,

திருவாடானை
நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாடானை தாலுகாவில் நடப்பாண்டில் 65 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.மழையால் பெரும்பாலான நிலங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் அறுவடை பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தண்ணீரை வெளியேற்றி தற்போது அறுவடையில் ஈடுபட்டுஉள்ளனர்.இந்நிலையில் திருவாடானை, நீர்க்குன்றம், மங்களக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதில் சன்ன ரகம் குவிண்டால் (100கிலோ) 2060 ரூபாய்க்கும், பொது ரகம் 2015 ரூபாய்க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராசு கூறியதாவது:உரம் மற்றும் இடுபொருட்கள், அறுவடை இயந்திர வாடகை உயர்வு, ஆட்கள் கூலி என உற்பத்திக்கான செலவு கடந்த மூன்று ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்துள்ளது. குவிண்டால் 2500 ரூபாய்க்கும் கூடுதலாக நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஆகவே நெல் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X