பொது செய்தி

இந்தியா

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து டிசம்பரிலும் அதிகரிப்பு

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, கடந்த டிசம்பர் மாதத்தில் 38.91 சதவீதம் உயர்ந்திருப்பதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த டிசம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 38.91 சதவீதம் அதிகரித்து, 2.80 லட்சம் கோடியாக உள்ளது.பொறியியல், ஜவுளி, ரசாயனம் ஆகிய துறைகளில் ஏற்றுமதி அதிகரித்திருப்பதை அடுத்து, டிசம்பரில் இந்த உயர்வு
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து டிசம்பரிலும் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, கடந்த டிசம்பர் மாதத்தில் 38.91 சதவீதம் உயர்ந்திருப்பதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த டிசம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 38.91 சதவீதம் அதிகரித்து, 2.80 லட்சம் கோடியாக உள்ளது.பொறியியல், ஜவுளி, ரசாயனம் ஆகிய துறைகளில் ஏற்றுமதி அதிகரித்திருப்பதை அடுத்து, டிசம்பரில் இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளது.கடந்த டிசம்பரில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது.


latest tamil news



இம்மாதத்தில் இறக்குமதி 38.55 சதவீதம் அதிகரித்து, 4.40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.60 லட்சம் கோடி ரூபாயாக, டிசம்பரில் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஏற்றுமதி 49.66 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியும் 68.91 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 10.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
15-ஜன-202212:05:59 IST Report Abuse
பாமரன் ...💪)
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
15-ஜன-202211:08:30 IST Report Abuse
radha காங்கிரஸ் நேரு திமுகா தான் காரணம். இப்படிக்கு சங்கிகள்.
Rate this:
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
15-ஜன-202211:07:48 IST Report Abuse
Sathiamoorthy.V ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X