சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை  கொடுமை பொறியாளர் மீது வழக்கு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
ராமநாதபுரம் :கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் கேட்டு இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய கட்டடக்கலை பொறியாளர் மற்றும் அவரது இரு சகோதரிகள் மீது வழக்கு பதியப்பட்டது.ராமநாதபுரம் சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் முகமது நவாஸ் 40. கட்டடகலை பொறியாளராக வேலை செய்கிறார். இவருக்கும் ராமநாதபுரம் வெற்றிலைக்கார தெரு ஹமீது கனி மகள் ஹமீதா பஷீரா 36, என்பவருக்கும் 2004ல் திருமணம் நடந்தது.

ராமநாதபுரம் :கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் கேட்டு இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய கட்டடக்கலை பொறியாளர் மற்றும் அவரது இரு சகோதரிகள் மீது வழக்கு பதியப்பட்டது.ராமநாதபுரம் சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் முகமது நவாஸ் 40. கட்டடகலை பொறியாளராக வேலை செய்கிறார். இவருக்கும் ராமநாதபுரம் வெற்றிலைக்கார தெரு ஹமீது கனி மகள் ஹமீதா பஷீரா 36, என்பவருக்கும் 2004ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 45 பவுன் நகைகள், தலா 2 சென்ட் நிலம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். 2021 மார்ச் கடைசி முதல் தற்போது வரை கூடுதலாக ரூ.10 லட்சம் கேட்டு கொடுமை செய்துள்ளார். கணவரின் சகோதரிகளான அதே பகுதியை சேர்ந்த ரஷிமா பேகம், சம்சத் பேகம் ஆகியோரும்இதற்கு உடந்தையாக இருப்பதாக ராமநாதபுரம்அனைத்து மகளிர் போலீசில் ஹமீதா பஷீரா புகார் அளித்தார்.வரதட்சணை கொடுமை மற்றும் 2019 முஸ்லிம் பெண்களுக்கான திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எஸ்.ஐ., ஹெலன் ராணி, மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X