தாயமங்கலத்திற்கு மதியம் பஸ்கள் இல்லாமல் மாணவர்கள் அவதி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
தாயமங்கலம்,:தாயமங்கலத்திற்கு மதிய வேளைகளில் சிவகங்கையில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள், பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தாயமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சிவகங்கை, மதுரை, மானாமதுரை,பரமக்குடி மற்றும் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக மேற்கண்ட ஊர்களில் இருந்து

தாயமங்கலம்,:தாயமங்கலத்திற்கு மதிய வேளைகளில் சிவகங்கையில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள், பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தாயமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சிவகங்கை, மதுரை, மானாமதுரை,பரமக்குடி மற்றும் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக மேற்கண்ட ஊர்களில் இருந்து காலை, மதியம், மாலை, இரவு வேளைகளில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.கடந்த சில நாட்களாக சிவகங்கையிலிருந்து மதிய நேரம் தாயமங்கலம்செல்லும் அரசு பஸ் இயக்கப்படாததால் அங்குஇருந்து தாயமங்கலத்திற்குவரும் மாணவர்கள் மற்றும்பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக வருகின்றனர்.தாயமங்கலம் ஒன்றியகவுன்சிலர் கீர்த்தனா கூறுகையில், தாயமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிவகங்கையில்படித்து வருகின்றனர்.மதியம் தாயமங்கலத்திற்கு அரசு பஸ்களில் வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மதிய நேரம் வரும் பஸ், ஓட்டுநர் மற்றும் டிரைவர் பற்றாக்குறையால் பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் மற்றும் தாயமங்கலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக மதிய வேளையில் இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் தாயமங்கலத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X