தேவகோட்டை, :தேவகோட்டை நகரின் முக்கிய மையப்பகுதி மட்டுமின்றி போக்குவரத்து நெருக்கடியான பகுதி தியாகிகள் பூங்கா. பூங்காவின் தென்புற வீதி மிக குறுகலானது. இவ்வீதியில் கடைக்கு வரும் வாகனங்களை நிறுத்தி கொள்கின்றனர். மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் எதிரே போலீசார் பார்க்கிங்கிற்கு இடம் ஒதுக்கி உள்ளனர். பார்க்கிங்கிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெளியூர்செல்பவர்கள் டூவீலர்களை காலையில் நிறுத்தி இரவு தான் எடுத்து செல்கின்றனர். நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் நிரந்தர ஆக்கிரமிப்பாக உள்ளன. போக்குவரத்து மிகுந்த நேரத்தில் கடைகளின் முன் லாரிகளை நிறுத்தி சரக்கு ஏற்றி இறக்கி ரோட்டை மறித்து கொள்கின்றனர்.போக்குவரத்து குறைவாகஇருந்த காலத்திலேயே பூங்கா தெற்கு வீதி ஒரு வழிப்பாதையாக பல ஆண்டுகளாக இருந்தது. தற்போது போக்குவரத்து அதிகரித்த நிலையில் குறுகலான இந்த ரோட்டில் இருவழிப் பாதையாக்கப்பட்டதால் நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.பூங்கா தென் புறம் உள்ள பார்க்கிங் மற்றும் நடை பாதை கடைகளை அதிக இடவசதி உள்ள வலது புறம் மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE