சிவகங்கை :சிறாவயல், கண்டுபட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை, மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துகொள்ளுமாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். அவர் கூறியதாவது:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,17ல் சிறாவயல், ஜன.,18ல் கண்டுப்பட்டி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் காளைகளின் உரிமையாளர்கள், மாடு பிடிவீரர்கள் ''www.sivaganga.nic.in'' என்ற வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், என்றார்.