காளையார்கோவில் : காளையார்கோவில் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்த நெல்லை விற்பனை செய்ய புரசடை உடைப்பில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காளையார்கோவில் ஒன்றியம் சூராணம், உதயனுார், காஞ்சிபட்டி, பருத்திக்கண்மாய், முடிக்கரை, மறவமங்கலம் உட்பட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் செல்லபொன்னி, அம்பாசமுத்திரம், என்.எல்.ஆர்.,ஆர்.எல்.ஆர்., ரக நெல் நடவு செய்வு அறுவடைக்கு தயாராக உள்ளது. விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தி 1000 விவசாய உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.3 ஆயிரம் மூடைகளுக்கான கோடவுன்: இவர்களின் வசதிக்காக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கட்டப்பட்ட நெல் உலர் களம், 3 ஆயிரம் நெல் மூடைகளை பாதுகாக்கும் கோடவுன், காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் பராமரித்து வருகின்றனர். இந்த இடத்தில் உள்ள கோடவுன் மற்றும் நெல் உலர் களம், அலுவலகத்தை பயன்படுத்தி நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் நிலையத்தை துவக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் உணவு அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புரசடை உடைப்பில் போதிய வசதி: எஸ்.குமரேசன், தலைவர், உழவர் உற்பத்தியாளர் குழு, காளையார்கோவில்: எங்கள் நிறுவனம் சார்பில் வாடகைக்கு எடுத்துள்ள கோடவுனில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கலாம் என அரசுக்கு தெரிவித்துள்ளோம். இங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைந்தால் 25 கிராம விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய வசதியாக இருக்கும். அந்தளவிற்கு கோடவுன், நெல் உலர் களன், அலுவலக வசதிகள் உள்ளன. இங்கு கொள்முதல் நிலையம் அமைக்க கலெக்டர் அனுமதிக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE