பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த கிடாரி கன்று வளர்ப்பாளருக்கு பரிசு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கால்நடைத்துறை சார்பில், கிராமம் வாரியாக, சிறப்பு முகாம் நடந்து வருகிறது. ஒவ்வொரு கோட்டத்திலும், வருவாய் கிராமம் வாரியாக, கால்நடை டாக்டர் குழுவினர் முகாம் நடத்தி வருகின்றனர்.கறவை மாடு, ஆடுகள், கோழி என, அனைத்து வகையான கால்நடைகளுக்கும் பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில், தொரவலுார் ஊராட்சி,

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கால்நடைத்துறை சார்பில், கிராமம் வாரியாக, சிறப்பு முகாம் நடந்து வருகிறது. ஒவ்வொரு கோட்டத்திலும், வருவாய் கிராமம் வாரியாக, கால்நடை டாக்டர் குழுவினர் முகாம் நடத்தி வருகின்றனர்.கறவை மாடு, ஆடுகள், கோழி என, அனைத்து வகையான கால்நடைகளுக்கும் பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில், தொரவலுார் ஊராட்சி, ஆண்டிபாளையம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.கால்நடைத்துறை உதவி இயக்குனர், பரிமள ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, டாக்டர்கள் சக்திவேல், நந்தகுமார், கால்நடை பணி உதவியாளர் யோகநாதன், செயற்கை முறை கருவூட்டாளர் காளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று, முகாம் நடத்தினர்.கால்நடை பராமரிப்பு, கோடை மற்றும் குளிர் காலங்களில், கால்நடைகளை தாக்கும் நோய்கள், அவற்றில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் விளக்கப்பட்டது. முகாமில் ஒரு பகுதியாக, சிறந்த முறையில் கிடாரி கன்று வளர்த்து வருவோருக்கு, பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.ஆண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த, ஆறு பயனாளிகள், சிறப்பாக கிடாரி கன்று வளர்ப்பதற்காக, பால் சேமிக்கும் எவர்சில்வர் பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X