பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு மகிழ் கணித பயிற்சி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்:கணித பாடம் நடத்தும் முறை எப்படி என்பதை, துறை சார்ந்த வல்லுனர் மூலம் விளக்கி, கணித ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் மகிழ் கணித பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஆசிரியர் - மாணவர் இடையேயான கற்றல் இடைவெளியை தவிர்க்க, அவ்வப்போது கல்வி துறையால் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கணித பாடம் படிக்கும் மாணவர்களுக்கு பாடத்தை பயமின்றி, எளிதாக படிக்க வைப்பது

திருப்பூர்:கணித பாடம் நடத்தும் முறை எப்படி என்பதை, துறை சார்ந்த வல்லுனர் மூலம் விளக்கி, கணித ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் மகிழ் கணித பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஆசிரியர் - மாணவர் இடையேயான கற்றல் இடைவெளியை தவிர்க்க, அவ்வப்போது கல்வி துறையால் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கணித பாடம் படிக்கும் மாணவர்களுக்கு பாடத்தை பயமின்றி, எளிதாக படிக்க வைப்பது எப்படி என்பது குறித்தும், பாடம் நடத்தும் முறை பற்றியும், துறை சார் வல்லுனர் மூலம் கணித பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும், 20 மற்றும், 21ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும், மகிழ் கணித பயிற்சி எனும் பெயரில் பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பல பகுதியில் ஆசிரியர் சரிவர கணித பாடம் கற்பிக்காததால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பலர் கணித பாடங்களை படிப்பதிலும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதில் தடுமாற்றம் உள்ளது. பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதனால், ஆசிரியர்களுக்கு வல்லுனர்களை கொண்டு கணித பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X